Wednesday, March 21, 2012

எழும்பும் சங்கொலியில்


எழும்பும் சங்கொலியில்
சங்கரனின் செயல் ஒழிந்திருக்கும்..

பரவும் உள்லோலியில்
சங்கரனே உன்னுள் ஒளிந்திருப்பான்

ஒலி கொண்டு ஒளியாய்
உன்னில் ஒழிந்திருப்பவன்

ஓங்காரத்தின் ஒலியாகி
ஒளியாய் எங்கும் நிறைந்திருப்பவன்

 -ஆக்கப்பித்தன்-

Friday, February 10, 2012

இன்றைய நிலை

 
கூட்டம் கூட்டமா சேர்ந்து கடவுள் பேருல கொல்லையடிக்கும் கும்பல் உலகத்தில கூடி போச்சு... கொஞ்சம் சிந்திங்க சனங்களே எத்தனை கூட்டம் கூடியும் நீங்கள் எத்தனை கூட்டம் கூடியும் இருந்தாலும் நீங்க உங்களோடு எப்பவும் கூடி இருக்காவிட்டால் எந்த பிரயோசனமும் இல்லை. உங்களை பற்றி அறிய இனோருத்தரை நாடுவது எந்த வகையில் நியாயம் ..திரும்பவும் அவரோடு தொடர்ந்து தொங்குவது அத விட அநியாயம்.
குரு என்றால் ஒரு தனி நபர் அல்ல. அது ஒரு சூழ்நிலையோ, ஒரு சம்பவமோ, ஒரு பூவோ ஏன் ஒரு நாயைக் கூட இருக்கலாம். எது உங்களை விளிக்கச் செய்கிறதோ அதுவே குரு.
அவனின்றி அணுவும் அசையாது ... எவன் அவன் ..நீ தான் .. நீ இன்றி உன்னால் எதையும் செய்ய முடியாது. எல்லாமே உணகுல்தான் இருக்கிறது. முதல் உன்னை நம்பு.
 இன்றைய உலகத்தில குரு வியாபாரம் மற்றும் கடவுளை கூறி கூறி விற்கும் வியாபாரமும் தான் சிறந்த வரி இல்ல வியாபாரமாக இருக்கிறது. இது பினான்ஸ் கம்பனிகளை விட உங்கள் பணத்தை கொள்ளியாடிக்கும் வியாபாரம் கவனம் மக்காள் .
கைகளை இறுக பற்றி பிடிப்பதை விட திறந்து விடுவது சுதந்திரம்.
ஆக்கபித்தன்.கோபிரமணன்  - 10.20.2012

Friday, January 28, 2011

இக்கரையில் இருக்கும் பச்சைதான் அக்கரையிலும் எக்கரையிலும் இருக்கும் - நீ உன்மீது அக்கறையில் இருந்தால்...
புலம்பல் கோபிரமணன்

Thursday, January 27, 2011

என் புலம்பல் – கோபி ரமணன்


எப்படி பிறந்தேனோ !
எப்படி வளர்ந்தேனோ !
அப்படியே நான் இருக்க வரம் நீ தர வேண்டும்

மாமிசம் விரும்பி உண்பேன்
மற்றவர் வீட்டில் தண்ணீர் உண்பேன்
மாற்றான் என பார்பேனோ !

மனம் கலந்து உன்னை துதிக்க
மந்திரங்கள் நான் படிக்க
மாற்றான் தாயாய் உன்னை பார்க்க
மடையனுகள் போட்ட சட்டம் நான் உடைக்க

மாதா நீ சொல்லு ?
மாமிசம் உண்டால்
மாற்றான் தோள் சேர்ந்தால்
மனுஷன் போட்ட சட்டம் – என்னை என்ன செய்யும் ?

மாதா நீ என்னுள் இருக்கையில்
மனுஷன் போட்ட சட்டம் – என்னை என்ன செய்யும் ?

என் புலம்பல் – கோபி ரமணன்


ஐந்தில் மூன்று போனால் இரண்டு
அதில் ஒன்றுமட்டும் மூன்றுடன் புரண்டு
நான்காய் எட்டாய் திரிந்து பிரிந்து
ஒன்றாய் ஒன்றுடன் மட்டும் கூடியதால்
ஒன்றும் ஒன்றும் ரெண்டாயாகாமல்
ஒன்றாய் போகுமே.

என் புலம்பல் – கோபி ரமணன்

ஐந்து வழிகளுண்டு வீடு செல்ல
ஐந்து வழிகளிலும் செல்வதும் சிரமம்
ஐயனே இவ்வழிகள் ஐந்தும் ஓர் வழியாக – நான்
ஐயன் உன் திருவடி பணிந்தால்

ஐயன் நான் வீடு செல்ல ஒரு வழி வருமென
ஐயமின்றி தெளிந்ததும் ஐயமில்லை .

Sunday, September 26, 2010

மூன்றை உணரு முற்றும் உணர்வாய்



உன்னை உணர்தல் 
உணர்த்த படுவதை உணர்த்தல்
உணர்ந்ததை  உணர்ந்து நடத்தல் 


உன்னை உணர்தல் :

நான் யார் ? எதற்காக பிறப்பிக்கப்பட்டேன்? யாரால் யார்மூலம் ஏன் அந்த இடத்தில் பிறந்தேன்? என்றெல்லாம் கேள்விகள் பல மனதில் மிகவும் சுலபமாக எழும். இவாறு எழும் கேள்விகளுக்கு விடையை தேடு, அப்போதுதான் நீ யார் என்பதை உணர முடியும். உன்னை உணர்தலில் முழுமை அடைவது சிறிய காரியம் என எண்ணுவது தவறு. ஆனால் தொடர்ந்து தேடு. ஒரு நாள் உன்னிலும் நீ கடவுளை உணர்வாய்.


உணர்த்த படுவதை உணர்த்தல்:

எம்மை அறியாமலே எமக்கு இலகுவாக 'உணர்தல்' பாடத்தை வாழ்கையே கற்று தந்துவிடும் இல்லையா நண்பர்களே? உதாரணமாக சொல்வதென்றால் எத்தனையோ அடுக்கிக்கொண்டு போகலாம். ஒன்றை பார்ப்போமானால், மது அருந்துவது மயக்கத்தை தரும் வேதனையை போக்கும், அதே மது எம்மை அருந்தினால் எல்லாருக்கும் வேதனையை தருவதும் அதுவாகவே இருக்கும். இது வாழ்க்கையில் யாவரும்மே உணர்ந்தது. அப்படியானால் இங்கே உணர்த்தபடுவது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. எப்படி உள்ளங்கை நெல்லியாக உணர்த்த படுவதை உணராமல் இருப்பது யார் தப்பு?


உணர்ந்ததை  உணர்ந்து நடத்தல் :

நெருப்பில் கை வைத்தால் சுடும் என்று உணர்ந்ததை உணர்ந்தே நாம் அதைதொடுவதில்லை. இதைத்தான் சொல்வது உணர்ந்ததை உணர்ந்து நடத்தல். ஆனால் நாமோ உணர்ந்த பின்னும் நெருப்போடு உறவு கொண்டு  தீ காயங்களால் வேதனைப்பட்டால் அது நம் அறிவீனமாக காட்டுகின்றது என்று எங்களாலே உணர கூடியதாக இருக்கும் என்பது உண்மை.

"இந்த மூன்று உணர்தலையும் நீ உணர்ந்தால் உன்னை உணரபவர்களோ எத்தனையோ " - ஜி.ஆர் - 2010